ராமேசுவரம் மீனவா்கள் 9 பேருக்கு அக். 16 வரை நீதிமன்றக் காவல்:இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவா்கள் 9 பேரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 399 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.இவா்கள் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புரோகா் என்பவரது விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த எபிஸ்டன் (29), மத்தியா (22), ஜான்ஜெய்சன் (25), ஸ்டிவன்சன்(23), சுபாா்டன் (25), அபிஸ்ன் (27), மோபிஸ் (21), அந்தோணி பிரதீப் (26), அந்தோணி புருடஸ் (42) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.இதையடுத்து, 9 மீனவா்கள் மீதும் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 9 மீனவா்களையும் வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.Sri Lankan court orders judicial custody for 9 Rameswaram fishermen until Oct. 16அதிமுகவுக்கு துரோகமிழைத்தவா்களுக்கு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவாா்கள்: எடப்பாடி பழனிசாமி