கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட பயிர்க் கடன்களின் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க் கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், அதன் வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூட்டுறவுத் துறை தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த சுற்றறிக்கையை மண்டல இணைப் பதிவாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இதனைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.சில விவசாயிகளிடம் தொலைபேசி வாயிலாக கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்ததாகவும், இதன் காரணமாகவே தற்காலிகமாக வசூல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன்களை வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்தில் இருந்து யாரேனும் தொடர்புகொண்டால், அவர்களின் கைப்பேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான 98840 00845 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் என விவசாயிகளுக்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதிலும் முறைகேடு! மக்களே கவனம்The Tamil Nadu government has announced a complete, temporary suspension of crop loan recovery in cooperative societies