ஆசிய விளையாட்டு: தங்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை; 77 பதக்கங்களுடன் இந்தியா!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மகளிர் ரிகர்வ் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் குங்குமம் மொஹோத் (17) தங்கம் வென்றுள்ளார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை (அக். 2) ஒரே நாளில் இந்தியா 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்கள் வென்றது. இந்த நிலையில், இதுவரையில் 16 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, இன்று (அக். 3) மேலும் ஒரு தங்கம் வென்றுள்ளது.தனிநபர் மகளிர் ரிகர்வ் வில்வித்தை இறுதிப் போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஓ யேஜினை 6 - 5 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் குங்குமம் மொஹோத் (17) தங்கம் வென்றுள்ளார்.இதன் மூலம் தனிநபர் ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக மட்டுமின்றி, தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாகவும் குங்குமம் சாதனை படைத்துள்ளார்.இதுவரையில் 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என இந்தியா மொத்தமாக 77 பதக்கங்களை வென்றுள்ளது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா 6 தங்கங்களுடன் 10 பதக்கங்கள் அறுவடை!Asian Games: 17-year-old Kumkum Mohod bags historic gold in women's recurve individual