`ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். மேலும் படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத்தே அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.வெளியீடு தேதி நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்து ரசிர்களை படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியல் ஆழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் டிரைலர் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். "The film crew has announced the trailer release date of 'Jailer 2' today."விமானத்தில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த சுப்ரீம் ஸ்டார்!