பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து நடிகர் சரத்குமார் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.இதுகுறித்து சரக்குமார் தனது எக்ஸ் தளத்தில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரஜினிகாந்தை எதிர்பாராத விதமாக சந்தித்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. மைசூரில் நடைபெறும் எங்களது படப்பிடிப்பு பணிகள் மற்றும் பணிச்சூழல் குறித்து இருவரும் பரிமாறிக்கொண்டோம்.சென்னை வந்ததும் ரசிகர்கள் மற்றும் அபிமானிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நாங்கள் இன்று இருக்கும் நிலைக்கு காரணமான ரசிகர்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமாகவும், மகிழ்ச்சியான தருணமாகவும் அமைந்தது என்று தெரிவித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்மன். அஸ்வத் மாரிமுத்து இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் தற்போது நடைபெற்று வருகிறது.Actor R. Sarathkumar has shared his happiness about unexpectedly meeting superstar Rajinikanth on a flight from Bangalore to Chennai.சத்தியவான் சாவித்திரி புதிய வெளியீட்டுத் தேதி!