இறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா அரைசதம்: பாகிஸ்தானுக்கு 212 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சூர்யவன்ஷி 15, சஞ்சு சாம்சன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிஷேக் சர்மா சரவெடியாக விளையாடினார். அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் துபே 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பாக அராஃபத் மின்ஹாஸ், அகமது டானியல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியில் வெல்லும் அணி தங்கப் பதக்கம் கிடைக்கும். இதுவரை இந்தியாவுக்கு 16 தங்கம் உள்பட 77 பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது. Abhishek Sharma and Tilak Varma hit half-centuries in the final: Target of 212 runs set for Pakistan!