விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள பத்தா திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், இப்படம் இரண்டு நாள்களில் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் ஞாயிற்றுக்கிழமையும் மேலும் வணிகம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான செல்லமே மகளே, ஊரோட ஒத்த டான் ஆகிய பாடல்கள் இப்படத்தின் பாடல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சத்தியவான் சாவித்திரி புதிய வெளியீட்டுத் தேதி!The film baththa, starring Vijay Sethupathi, has received a positive reception from fans.