ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டு ஆடவருக்கான கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.கிரிக்கெட் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா, திலக் வர்மா அரைசதம் அடித்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் ஹாசன் நவாஸ் 96 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் வீணானது. இறுதியில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது. இத்துடன் இந்தியாவுக்கு 81 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.BACK-TO-BACK GOLD! India’s men’s cricket team successfully defend their title to win their 2nd #AsianGames gold at #AichiNagoya2026. pic.twitter.com/bPqWz2NMqK— Olympic Khel ™ (@OlympicKhel) October 3, 2026வில்வித்தையில் வெண்கலம் வென்ற நீரஜ்..! இந்தியாவுக்கு 80ஆவது பதக்கம்!Hassan Nawaz's (96) fighting effort in vain: India defeats Pakistan to win gold!