நெஸ்லே நிறுவன தயாரிப்பை விற்கத் தடை!

Wait 5 sec.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான ‘குறைந்த கொழுப்புள்ள பால் வெண்மையாக்கி’ (Low Fat Dairy Whitener) விற்பனையைத் தடை செய்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு தரமற்றது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,புது தில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள பாரத் ஹோட்டல் வளாகத்தில் இருந்து நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான ’குறைந்த கொழுப்புள்ள பால் வெண்மையாக்கி’-யின் மாதிரி சேகரிக்கப்பட்டது. இதுதொடர்பான உணவு ஆய்வாளரின் ஆய்வக அறிக்கையில், நெஸ்லே நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு தரமற்றது மற்றும் பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் விதிமுறைகளுக்கு உட்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வக பகுப்பாய்வு அறிக்கையின் நகல் உணவு வணிக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.விதிமுறைகளுக்கு இணங்காத நெஸ்லேவின் ’குறைந்த கொழுப்புள்ள பால் வெண்மையாக்கி’ தயாரிப்பு தொடர்பாக, மெசர்ஸ் பாரத் ஹோட்டல்ஸ் நிறுவனத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-இன் குறிப்பிட்ட பிரிவின் கீழ், உணவு ஆய்வாளரின் அறிக்கை மீது நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உணவு வணிக நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.6 பாதுகாப்பற்றது எனக் கண்டறியப்பட்ட குறிப்பிட்ட உணவுப் பொருளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு நெஸ்லே நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.எனத் தெரிவித்துள்ளது.இனி செல்போனே உங்கள் ஆடைகளின் அலமாரியாக மாறும்! கூகுள் போட்டோஸின் புதிய வசதி!The Food Safety and Standards Authority of India has banned the sale of a Nestlé product.