ஆடவர் ஹாக்கியில் தங்கம்..! வரலாற்று வெற்றியுடன் பதக்கப் பட்டியலில் 4ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, தங்கம் வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று கால்பகுதிகளில் (11, 23, 42ஆவது நிமிஷங்களில்) தலா ஒரு கோல் அடித்து அசத்தியது. மலேசிய அணி ஆறுதலாக முதல் காலிறுதிப் பகுதியில் 14ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தது. பின்னார், நான்காம் கால்பகுதியில் இந்திய அணி 54, 57ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 5-1 என அபார வெற்றியைப் பெற்றது.இந்த வெற்றியுடன் ஆடவர் ஹாக்கி அணியும் ஒலிம்பிக் 2028க்குத் தேர்வாகியுள்ளது. ஆசிய விளையாட்டில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வென்று சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவுக்கு 84 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் அதில் 21 தங்கம்,  26 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா முதல்முறையாக நான்காவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. உஸ்பெகிஸ்தான் ஐந்தாவது இடத்துக்கு கீழிறங்கியது. ’ ! India defeat Malaysia 5-1 in the Asian Games 2026 final to successfully defend their crown and create history by winning consecutive Asian Games gold medals… pic.twitter.com/ZaBzKMGyJw— Hockey India (@TheHockeyIndia) October 3, 2026 , ! For the first time ever, the Indian Men’s Hockey Team successfully defends its Asian Games title, bringing home back-to-back gold medals -- Hangzhou 2023 and Aichi-Nagoya 2026! THE CHAMPIONS OF ASIA, ONCE… pic.twitter.com/5EJ48i0SZY— Hockey India (@TheHockeyIndia) October 3, 2026வெண்கலம் வென்ற தீபக் புனியா..! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 83!India wins gold in men's hockey..! Moves up to 4th place in the medal tally!