குருவாயூர் கோயில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசனம்!

Wait 5 sec.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு வரும் வயதான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், மூத்த குடிமக்களுக்கான தனி தரிசன வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதற்கான நேர விவரங்களையும் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் அனுமதிக்கப்படுவர். ஞாயிற்றுக்கிழமைகள், அனைத்துப் பொது விடுமுறை நாள்களில் சிறப்பு தரிசனம் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை மட்டுமே நடைபெறும்.தரிசனத்துக்காகச் செல்லும் மூத்த குடிமக்கள், வயது நிரூபிக்கும் அடையாள ஆவணத்தைக் காட்டினால், கோயில் நிர்வாகத்தின் தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் அன்றைய நடைமுறைகளைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.