தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தவுள்ள நிலையில் சிவாஜி பூங்காவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதற்கு நாடு முழுவதுமே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தில்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டு பேரணியாக வந்த மாணவர் அமைப்பினர் 500 -க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிவாஜி பூங்காவில் போராட்டத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை சிவாஜி பூங்காவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல மும்பையின் தாதர் நகர் ரயில் நிலையம் அருகிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சிவாஜி பூங்காவில் போராட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது, நடைப்பயிற்சிக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் கூறி, அப்பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. Security tightened at Mumbai's Shivaji Park ahead of CJP protest seeking CEC Gyanesh Kumar's resignationஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்! 500 பேர் கைது!