வழக்கில் சிக்கினால் நெஞ்சுவலி வருவதுதான் திமுகவினருக்கு வாடிக்கை: அமைச்சர் ரமேஷ்

Wait 5 sec.

பொதுமக்களின் சொத்துகளை அபகரித்து மாட்டிக்கொள்ளும்போது நெஞ்சுவலி வருவதுதான் திமுகவினருக்கு வாடிக்கையாக இருப்பதாக அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை, 2022-ல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக திருச்சி திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பேசியதாவது, "கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் கோயில் நிலங்களில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்களே நேரடியாகப் புகார் தெரிவிக்கின்றனர். அதுபோலத்தான் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்தின் மூலம் காவல்துறை விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி திமுகவினர் நீதிமன்றத்துக்குச் சென்றதுடன், எஃப்ஐஆரை ரத்து செய்யவும் கோரினர். இருப்பினும், நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், திமுகவினரே வழக்கைத் திரும்பப் பெற்றனர். முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், நெஞ்சு வலிப்பதாகக் கூறி தன்னைக் காவலில் எடுக்கக் கூடாது என்றும் அழுதார். இருப்பினும், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதைத்தான் திமுகவினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.கோயில் நிலங்களைப் பாதுகாப்பதாகக் கூறும் திமுகவினர் ஆட்சியிலேயே கோயில் நிலங்களை திமுகவினர் அபகரித்துள்ளனர்.ஆபாசமாகப் பேசுவது, பொதுமக்களின் சொத்துகளை அபகரிப்பது, மாட்டிக்கொண்டால் நெஞ்சுவலி வருவதுதான் திமுகவின் வாடிக்கை. திமுக அமைச்சர்கள் மட்டுமின்றி, திமுகவின் அடிமட்டத் தொண்டர்களும் இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.விஜய் பிரசாரம் செய்ததைவிட ரத்து செய்ததே அதிகம்! இன்றோ தெருத் தெருவாக... - பெ. சண்முகம் விமர்சனம்DMK members get heart attack if they get entangled in a legal case, says Minister Ramesh