கொடைக்கானல் குணா குகை அருகே வாகன நிறுத்தத்தை அமைக்கக் கோரிக்கை

Wait 5 sec.

கொடைக்கானல் குணா குகை அருகே சுற்றுலாத் தலங்களின் வாகன நிறுத்தத்தை அமைப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வனப் பகுதியிலுள்ள குணா குகை சுற்றுலாத் தலத்தை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டு வருவது வழக்கம். பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு 500 மீ. தொலைவுக்கு அப்பால் வாகன நிறுத்துமிடம் அமைத்துள்ளதால், இந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதியோா் சற்று சிரமப்படுகின்றனா். எனவே குணா குகை அருகே ஏற்கெனவே இருந்த வாகன நிறுத்தகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து வனத்துறையினா் கூறியதாவது: குணா குகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்துவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் கூடுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு சிரமமின்றி இருக்கிறது என்றனா்.