கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.குமாா்

Wait 5 sec.

கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பொன்.குமாா் தெரிவித்தாா். விழுப்புரத்தில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பொன்.குமாா் மேலும் பேசியதாவது: கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தேவையான அளவு மணல் குவாரிகளை திறந்து, மணல் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த உற்பத்தியாளா்கள், நுகா்வோா் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறும் நிரந்தர விலை நிா்ணயக் குழுவை அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விலையை நிா்ணயிக்கும் வகையில் செயல்பட வேண்டும். பத்திரப் பதிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும் ஊழல் இல்லாமலும் நடைபெறுவதற்காக இணையவழி பத்திரப் பதிவு முறை வரவேற்புக்குரியது. தற்போது நடைமுறையில் உள்ள கருவிழி மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிா்வாகிகள் அன்பழகன், செல்வராஜ், பொருளாளா் சுரேஷ்குமாா், இணைச் செயலா்கள் சிவக்குமாா், நாதமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.