ஆசிய விளையாட்டுப் போட்டியில் 97 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஆடவருக்கான 97 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியாவும் மங்கோலிய வீரர் கான்குயாக் கன்பாடர் உடன் மோதினார். இந்தப் போட்டியில் முதலில் தீபக் புனியா 2-0 என முன்னிலை வகித்தார். பின்னர், கன்பாடர் 1-2 என மீண்டெழுந்தார். இறுதியில் தடுப்பாட்டத்தில் அசத்திய தீபக் புனியா 2-1 என வென்றார். இந்த வெற்றியுடன் இந்தியாவுக்கு 83 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் அதில் 20 தங்கம், 26 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கிடைத்தால், பதக்கப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை முந்தி நான்காவது இடம் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.Deepak finished with a bronze! India’s 97kg freestyle wrestler finishes his #AichiNagoya2026 campaign on the podium. #AsianGames pic.twitter.com/9sVqFIMHGm— Olympic Khel ™ (@OlympicKhel) October 3, 2026மல்யுத்தத்தில் தங்கம் வென்ற அமன் ஷெராவத்..! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 82! Asian Games 2026: Deepak Punia won the bronze medal in wrestling, indias medal count 83