சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் முதல்வர் விஜய்யைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், இந்தியா கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாஜக – ஆர்எஸ்எஸ் அரசின் தலையீட்டால் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் பாதிக்கப்படுவது குறித்தும், எஸ்ஐஆர் நடவடிக்கையால் மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவது குறித்தும், இதனை எதிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் களப்பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, அமைச்சர் விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகாந்த் செந்தில், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன்; மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, எஸ். குருநாதன்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல். திருமாவளவன், பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய குழு உறுப்பினர் குணசேகரன்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர். ரவீந்திரநாத், டி.எம். மூர்த்தி; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:(1) இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினை இந்தியா கூட்டணி கட்சிகள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இந்த நல்ல அரசியல் முடிவை எடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுகிறது.(2) சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற வகையிலும், தகுதியான 13 கோடி வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கின்ற வகையிலும் செயல்படுகின்ற இந்திய தேர்தல் ஆணையத்தையும், அதனுடைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரையும், அவரை ஒரு கருவியாக பயன்படுத்தி இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலத்தை அரங்கேற்றி வரும் மோடி - அமித்ஷா கூட்டணியையும் இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.(3) இந்த ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் "ஜனநாயகத்தைக் காப்போம்" (Save Democracy) என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறது.(4) இறுதியாக சென்னை மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி ஒரு பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அதில் இந்தியா கூட்டணியினுடைய தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று இக்கூட்டம் முடிவு சய்கிறது.(5) இந்திய ஜனநாயகத்தை பேரழிவிலிருந்து பாதுகாக்கும் இந்த போராட்ட வடிக்கைகளுக்கு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், குடிமைச் சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேராதரவை தர வேண்டும் என்று இக்கூட்டம் அனைவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறது.Resolution passed at the INDIA alliance meeting praising Chief Minister Vijayஇடைத்தேர்தல்: அக். 4 மாலை 6 மணி முதல் என்னென்ன விதிமுறைகள் அமல்?