திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பெண் உயிரிழந்த துக்கத்தில் அவரது கணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். களக்காடு அருகேயுள்ள கக்கன் நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் சுடலைமணி (26). தொழிலாளி. இவரது மனைவியை ஒருவா் அவதூறாகப் பேசி தாக்கியதால், அவா் அவமானம் தாங்காமல் ஒரு மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் தனது 2 குழந்தைகளுடன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சுடலைமணி, கடந்த செப்.28 ஆம் தேதி களைகொல்லி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தாா். குடும்பத்தினா் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.