மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைகிறது.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும், தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதன்படி, அக்டோபர் 6 ஆம் தேதியில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்த நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என தவெக, அதிமுக, திமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவி வருகிறது.இந்த நிலையில், நாளையுடன் (அக். 4) தேர்தல் பிரசாரம் நிறைவடைவதால், இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்பில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், முதல்வர் விஜய்யும் நாளை (அக். 4) தாராபுரத்தில் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.தாராபுரத்தில் இறுதி கட்ட பிரசாரம்: முதல்வா் ச.ஜோசப் விஜய் நாளை கோவை வருகைMadhuranthakam, Dharapuram by-elections: Election campaigning concludes tomorrow