தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மீண்டும் போராட்டம் நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமாருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (அக்.2) தில்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பேரணியாகச் சென்றனர். இதில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான அதிஷி, அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட 700-க்கும் அதிகமானோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் இன்று (அக்.3) மதியம் 1 மணி முதல் ஞானேஷ் குமாருக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடைபெறும் எனவும், அதில் தாங்கள் பங்கேற்பதாகவும், நேஹா போரா, திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டத்திலும் காவல் துறையினர் தங்களைக் கைது செய்த பிறகு தாக்குதல் நடத்துவதாக, மாணவர்கள் குற்றஞ்சாட்டும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.ஏற்கெனவே, மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்துவதால் ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிஜேபி போராட்டத்துக்கு மமதா ஆதரவு! நன்றி தெரிவித்த தீப்கேவின் பதிவு முடக்கம்!once again protest against Chief Election Commissioner Gyanesh Kumar at Jantar Mantar in Delhi.