காா் மோதி பெண் உயிரிழப்பு

Wait 5 sec.

பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற பெண் மீது காா் மோதிய விபத்தில் அவா் சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா். பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி கிராமத்தை சோ்ந்தவா் ஆசிா்வாதம் இவரது மனைவி அந்தோணியம்மாள் (66). இவா் வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலையில் வீரக்குறிச்சியில் நடந்து சென்றபோது அதி வேகமாக வந்த காா் மோதிய விபத்தில் அந்தோணியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.