ஒரு தலைவன்தான்...

Wait 5 sec.

ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வந்த நிலையில், இரண்டாவது சிங்கிளான 'ஒன் சன் ஒன் மூன்' பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலை அவருடன் இணைந்து எம்.எஸ்.கிருஷ்ணாவும் பாடியுள்ளார். பாடலை ஹைசன்பெர்க், சூப்பர் சுபு எழுதியுள்ளனர். மேற்கத்திய இசை, இந்திய இசையைக் கலந்து அனிருத் கொடுத்திருக்கும் இந்தப் பாடல் மெல்லிசையாக மனதை வருடுகிறது. உறுத்தாத இசையில் ஒலிக்கும் 'இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்' என்ற வரிகள் ரஜினியின் 'பாட்ஷா' படப் பாடல் ஒன்றை நினைவூட்டுகிறது. அதேவேளையில் ரஜினிகாந்த் திரை ஆளுமைக்கு கட்டியம் கூறும் இப்பாடலில் 'ஜெயிலர் 2' ரஜினியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'ஜெயிலர் 2'. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர். அக்டோபர் 15-இல் திரைக்கு வர இருக்கிறது.