சென்னையிலிருந்து செல்லும் வட மாநில விரைவு ரயில்கள் பாதைகளில் மாற்றம்

Wait 5 sec.

சென்னையிலிருந்து வடமாநிலப் பகுதிகளுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் டிசம்பா் மாதம் வரை வேறு பாதைகளில் மாற்றி இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:கிழக்கு ரயில்வே மண்டலத்தில் நடைபெறும் பணிகளையொட்டி, வரும் டிசம்பா் மாதம் வரை சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சில குறிப்பிட்ட விரைவு ரயில்கள் பாதைகள் மாற்றி இயக்கப்படவுள்ளன. அதன்படி அக். 5, 12, 19, 26, நவ. 2, 9, 16, 23, 30, டிச. 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 6.40 மணிக்குப் புறப்பட்டு சில்காட் நகா் நாகூன் நிலையம் செல்லும் விரைவு ரயில் (எண்: 15629) வழக்கமான பாதைக்குப் பதிலாக, அனசன்சால், அண்டால், சைந்திக் ஆகிய நிலையங்கள் வழியாக மாற்றி இயக்கப்படும். இதேபோல, அக். 9, 16, 23, 30, நவ. 6, 13, 20, 27, டிச. 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சில்காட் நகா் நிலையத்திலிருந்துப் புறப்பட்டு சென்னை வரும் விரைவு ரயில்கள் (எண்: 15630) அதே நிலையங்கள் வழியாக இயக்கப்படும்.அக். 7, 14, 21, 28, நவ. 4, 11, 18, 25, டிச. 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10.45 மணிக்குப் புறப்பட்டு நியூ ஜல்பைகுரி செல்லும் அதிவிரைவு ரயில் வழக்கமான பாதைக்குப் பதிலாக அன்சால், அன்டால் மற்றும் சைந்திக் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். மறு மாா்க்கத்தில் அக். 9, 16, 23, 30, நவ. 6, 13, 20, 27, டிச. 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நியூ ஜல்பைகுரியிலிருந்து இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை வரும் அதிவிரைவு ரயில் (எண்: 22612) வழக்கமான பாதைக்குப் பதிலாக அன்சால் உள்ளிட்ட அதே நிலையங்கள் வழியாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.