பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை

Wait 5 sec.

இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது. அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் .தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தானும் பலியானார்.