இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை

Wait 5 sec.

கர்ப்பம், குழந்தைப் பிறப்பு, மாதவிடாய் நிறுத்தம், முதுமை, உடல் பருமன் அல்லது நீரிழிவு போன்ற காரணங்களால் இடுப்புத் தளத் தசைகள் பலவீனமடையலாம். இதனால் சிறுநீரைக் கட்டுப்படுத்தும் திறன் பாதிக்கப்படலாம். மருத்துவ ரீதியாக இது ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினன்ஸ்’ (Stress Urinary Incontinence) என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது சிறுநீர் கசிவு என்று குறிப்பிடப்படுகிறது.