ஃப்ளை துபை விமான சம்பவம்: நெதன்யாகு கடும் எச்சரிக்கை!

Wait 5 sec.

ஃப்ளை துபை விமான சம்பவத்திற்குப் பின் உள்ளது யாராக இருந்தாலும் அதற்கான கடுமையான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்திக்குத்து காயமடைந்த போதிலும் துணிவுடன் போராடி விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார் இந்திய விமானி ஸ்மித் மச்சார்.விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ்' விமானத்தில் அரங்கேறிய இச்சம்பவம் உலகம் முழுவதையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “காலம் செல்லச் செல்ல நிலைமை தெளிவாகத் தெரிகின்றது. தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டவர். பயணிகளுடன் சேர்த்து விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதே அவரது நோக்கம். அவர் யாரால் அனுப்பப்பட்டார் என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவரை அனுப்பியது யாராக இருந்தாலும் அதற்கான கடுமையான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டு இந்தக் கருத்தை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், ஈரானை எச்சரிக்கும் விதமாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், நெதன்யாகு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் 20,000 அமெரிக்க வீரர்கள் குவிப்பு: மீண்டும் தீவிரமடையும் போர்!Israeli Prime Minister Netanyahu has stated that whoever is behind the Flydubai flight incident will have to pay a heavy price.