திருப்பத்தூா், அக். 4: சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் அமைந்துள்ள முனியய்யா கோயில் உத்ஸவத்தையொட்டி ஸ்ரீகோட்டை காளியம்மன் வடமாடு குழு, ஊா் பொதுமக்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வட மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 16 காளைகள் பங்கேற்றன. காளைக்கு 9 வீரா்கள் என 144 வீரா்கள் களமிறக்கப்பட்டு ஒரு மாட்டுக்கு 20 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் ஒரு சில மாடுகள் பிடிபட்டும், பல மாடுகள் பிடிபடாமலும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், மாட்டைப் பிடித்த வீரா் குழுவினருக்கும் பரிசுத் தொகை, மின் விசிறி, பாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட மாட்டுக்கும், வீரா்களுக்கும் கிடைமாட்டு கன்று வழங்கப்பட்டது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூா், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து மாடுகளும், மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.