பிரபல LGBTQ கலைஞர் சுட்டுக்கொலை!

Wait 5 sec.

பஞ்சாப்பில் பிரபல LGBTQ மேக்கப் கலைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்தவர் பிரபல LGBTQ ஆதரவு மேக்கப் கலைஞர் மேட் சந்து (Mad Sandhu). இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் பாட்காஸ்ட் வழியாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான ஆதரவு கருத்துகளையும் அவர்களின் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து பரப்புரை செய்து தனக்கென பல பின்தொடர்பாளர்களையும் உருவாக்கினார். இதனால், மேட் சந்துவின் கருத்துகளும் விடியோக்களும் அதிக அளவில் பார்க்கப்படுவதுடன் பகிரப்பட்டு வந்தது. அதே நேரம், இக்கருத்துகளால் சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதாக மேட் சந்துவுக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்ந்தன. இந்த நிலையில், அமிர்தசரஸில் நேற்று (அக். 3) மாலை 6 மணிக்கு மேட் சந்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திடீரென துப்பாக்கியால் சூடு நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான சந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உடலைக் கைப்பற்றிய காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இச்சம்பவத்தால் பஞ்சாபில் ஆளும் அரசான ஆம் ஆத்மியின் சட்ட ஒழுங்கு சீரழிந்து வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேட் சுதனின் இயற்பெயர் மதுசுதன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளமையுடன் உயிர் நீத்தார்... சிங்கீதம் சினீவாச ராவுக்கு கமல் ஹாசன் இரங்கல்!LGBTQ makeup artist mad sandhu killed in punjab