பிகாரில் இரு குழுக்களுக்கு இடையே மோதலில் 3 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்தப்பட்டு 3 பேர் பலியாகினர். மற்றொருவர் காயமடைந்தார் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு பர்சா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்.பலியானவர்கள் முகேஷ் யாதவ், ரவிஷ் யாதவ் மற்றும் அன்கு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர் விவேக் குமார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். சரண் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ரோஷன் குமார் கூறுகையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்கள் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோதலுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணைக்காக ஆறு பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பான தகராறிலேயே இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Three people were stabbed to death, and another was injured following a clash between two groups in Bihar's Saran district, police said on Sunday.மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்