சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!

Wait 5 sec.

தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பேச்சை முதல்வர் விஜய் இன்று (அக். 4) விமர்சித்துள்ளார்.தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.வாக்கு சேகரிப்பின்போது முதல்வர் விஜய் பேசியதாவது:தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்க்கின்ற ஆள் நான் அல்ல. என் சொந்தங்களை எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பேன். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும் வாக்களிப்பது பெண்களை அநாகரிகமாகப் பேசுவதை நாம் ஆதரிப்பது போல ஆகிவிடும். இதை நான் வெறும் ஓட்டுக்காக சொல்லவில்லை. மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக். 2) இங்கு பிரசாரத்துக்கு வந்த போது, சத்தியபாமா சகோதரியை என்ன பேசிவிட்டு சென்றார்? அதை காது கொடுத்து கேட்க முடியாது. மறக்கும்படியா பேசியிருக்கிறார்? அவர் மட்டுமா இப்படி பேசுகிறார்? அவர் வளர்த்து வைத்திருக்கும் அனைவரும் இப்படித்தான் பேசி வருகிறார்கள்.என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதை நான் தாங்கிக் கொள்கிறேன், பொறுத்துக்கொள்வேன். ஆனால், நமது சகோதரி பற்றியோ வீட்டில் உள்ள அம்மா, அக்கா, தங்கை பற்றியோ நீங்கள் பேசினால் அதை நான் சும்மா விடமாட்டேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.தாராபுரம் பிரசாரம்: மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்!Chief Minister Vijay today (Oct. 4) criticized the remarks made by DMK leader M.K. Stalin regarding Sathyabama, the TVK candidate for the Dharapuram constituency.