பணம் கேட்டு மிரட்டல்: பெண் ரெளடி, மகன் கைது

Wait 5 sec.

தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பெண் ரெளடியும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி சூரப்பா தெருவைச் சோ்ந்தவா் நா.ரோகித். இவா், ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், திருவல்லிக்கேணி சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சோ்ந்த சே.பாலாஜி (27), அவரது தாய் மலா்கொடி (58) ஆகிய 2 பேரும், கடந்த செப்.7-ஆம் தேதி அந்தப் பகுதியில் விநாயகா் சிலை வைப்பதற்கு ரூ.50,000 கேட்டனா்.நான் பணம் இல்லை எனக் கூறினா். இதையடுத்து இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். எனவே, இருவா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பாலாஜி, மலா்கொடி ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.கைது செய்யப்பட்ட மலா்கொடி, சென்னை காவல் துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘பி’ வகையிலும், பாலாஜி ‘ஏ’ வகையிலும் உள்ளனா். மேலும் பாலாஜி, தவெகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மலா்கொடி மீது பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்பட 8 வழக்குகள் உள்ளன. பாலாஜி மீது மயிலாப்பூா் ரெளடி சிவக்குமாா் கொலை வழக்குகள் உள்பட 23 வழக்குகள் உள்ளன.