ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Wait 5 sec.

நடிகர்கள் ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயராம். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் மலையாளத்தில் பெரிய இடத்தைப் பிடித்தார். ஒரே நேரம் மலையாள சினிமாவிலும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவே உள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான கதாபாத்திர நடிகராகவும் அசத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடித்த பரிமளா அண்ட் கோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், நடிகர்கள் ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஒய். எஸ். கௌதம் ராஜ் இப்படத்தை இயக்குகிறார். வொயிட் கார்பெட் பிலிம்ஸ் ரிடெக்டட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ராக்கா எப்போது வெளியாகும்? அட்லீ பதில்!Filming has begun for the movie starring Jayaram and Simran.