தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் சி. ஜோசப் விஜய், மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்தார்.தாராபுரம் (தனி) சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் சி. ஜோசப் விஜய், தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று(அக். 4) சாலைவலம் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வருகைத்தந்துள்ளார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்த தமிழக முதல்வர் விஜய், விமான நிலையத்தின் உள்பகுதியில் இருந்து பிரத்யேக ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் வந்தார்.இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து பிரசார வாகனத்தில் ஏறி, சாலைவலம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, முதல்வர் விஜய் மாட்டுவண்டியில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.மாருதி நகரில் சாலைவலத்தைத் தொடங்கிய முதல்வர் விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயிலில் நிறைவு செய்கிறார்.இதற்காக சுமார் 3000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். TVK leader C. Joseph Vijay, who is campaigning in support of the party's candidate Sathyabhama for the Dharapuram by-election, canvassed for votes while traveling in a bullock cart.114 கி.மீ தூரம் சாலைவலம் செல்லும் முதல்வர் விஜய்! மாருதி நகரில் பிரசாரம் தொடக்கம்!