நடிகர் மம்மூட்டி டோரதி திரைப்படத்தைப் பாராட்டியதாகக் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.Thank you @mammukka Sir for your time, Your wishes, Your Encouraging words on #Dorothy... Means a lot sir You are always an Inspiration sir ❤️ pic.twitter.com/ZdLNAq0lyw— karthik subbaraj (@karthiksubbaraj) October 3, 2026 இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பதிவொன்றை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ், “டோரதி குறித்தான உங்கள் வாழ்த்துகளுக்கும் நேரத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி மம்மூட்டி சார். நீங்கள் எப்போதும் உத்வேகத்தை அளிக்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். வரவேற்பைப் பெறும் விஜய் சேதுபதியின் பத்தா! வசூல் எவ்வளவு? Karthik Subbaraj has posted that actor Mammootty praised the film Dorothy.