ஆசிய விளையாட்டில் ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 20 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் - தஜிகிஸ்தானின் பெலோல்யுப்ஸ்கி அயால் உடன் மோதினார். இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வென்று தங்கம் வென்றார். தஜிகிஸ்தான் வீரர் வெள்ளியும் சீன வீரர் வெண்கலமும் வென்றார்கள். இந்தியாவுக்கு இத்துடன் 82 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 20 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கிடைத்தால், பதக்கப் பட்டியலில் உஸ்பெகிஸ்தானை முந்தி நான்காவது இடம் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. AMAN SEHRAWAT IS AN ASIAN GAMES CHAMPION! The Indian wrestler wins gold in the men’s freestyle 57kg category at #AichiNagoya2026! #AsianGames pic.twitter.com/KpXUVcIYgg— Olympic Khel ™ (@OlympicKhel) October 3, 2026ஹாசன் நவாஸ் (96) போராட்டம் வீண்: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா! Indias Aman Sehrawat won the gold medal in the men's freestyle 57kg wrestling event at the asian games 2026