மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா? தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கேள்வி!

Wait 5 sec.

மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா? என தவெக எம்எல்ஏவுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், புற நோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு மருத்துவர், அதுவும் இரவுநேரப் பணி பார்க்கும் மருத்துவர் ஓய்வு எடுப்பது இயல்பு என்பது கூட தெரியாமல், தனது ஆச்சரியக்குறித் தனத்தை காட்ட டாக்டரை எழுப்பி அறிவுரை ரீல்ஸ் எடுத்துள்ளார் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன்!மக்கள் மேல அவ்வளவு அக்கறை இருந்தால், இதே மாதிரி போய் மாலை 5 மணிக்கு மேல் உங்க தலைவரை, தமிழக முதல்வரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா?டெங்கு காய்ச்சலுக்கு முழு கை சட்டை போடவும் என்ற அறிய கண்டுபிடிப்பை கூறிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், எங்கள் பொதுக்குழுவில் மூக்கை நுழைப்பது போல இந்த எம்எல்ஏ-வுக்கு கண்டனம் தெரிவிப்பாரா? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவரை ஓய்வில் இருந்து எழுப்பி கேள்வி கேட்டதாக தவெக எம்எல்ஏ சரவணன் மீது சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. AIADMK has questioned a TVK MLA, asking: 'Can you wake up your leader after 5 PM and make him post reels?'செனாப், அஞ்சி பாலங்களை மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்!