அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காஸா போர் நிறுத்தத் திட்டம், பலஸ்தீன மக்களின் படுகொலை மற்றும் இடப்பெயர்வை நிறுத்துவது உள்ளிட்ட முக்கிய இலக்குகளைப் பூர்த்தி செய்வதாக உள்ளதாக கத்தார் பிரதமர் ஷெக் முகமது பின் அப்துர் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த சந்தர்ப்பத்தை அனைத்துத் தரப்பினரும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.