ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கில் 'பீ' அறிக்கையை பிழையாக எழுதியவர்களும், சம்பவ தினத்தன்று அலரி மாளிக்கைக்கும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்துக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களை மறைத்தவர்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். இவ்வாறான உண்மைகளை மறைத்து, உயிருடன் இல்லாத ஒருவர் மீது பழி சுமத்துவது வசீம் தாஜூடீனுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.