சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் மீது இஸ்ரேல், விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சிரிய அரச செய்தி நிறுவனமான சனா செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் சிரியாவின் ஜனாதிபதி மாளிகை மற்றும் பாதுகாப்பு அமைச்சை இலக்கு வைத்து இவ்வாறு கடுமையான தாக்குதல்களை இஸ்ரேலிய தரப்பு முன்னெடுத்துள்ளதாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலானது சிரியாவின் ஜனாதிபதி மாளிகையை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் இந்த விமான தாக்குதலில் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் கட்டடம் சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.