வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மாவனெல்லை, கிரிந்தெனிய பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞனை பிணையில் விடுவிக்க கல்கிசை நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹால்பந்தெனிய இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.