கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசலொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிரசங்கத்தினை மேற்கொண்டிருந்தார்.இதன்போது வக்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினை கடுமையாக வலியுறுத்தியதுடன் வக்பு செய்தால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக புனித அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிடுகின்ற விடயங்களை எல்லாம் சுட்டிக்காட்டினார்.