முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் பேசப்படும்விடயமாக மாறியுள்ளது. 76 வயதான விக்ரமசிங்க, இதற்கு முன்பு ஆறு முறை பிரதமராக பதவி வகித்தவர், இலங்கையில் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதியாக வரலாற்றில் பதிவானார்.