ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள உள்ள 'ஏழு பயங்கரவாத மறைவிடங்கள் மற்றும் முகாம்களை' குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகக் கூறும் தாலிபன் அரசு, உரிய நேரத்தில் பதிலடி தரப்படும் என்று எச்சரித்துள்ளது.