அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விதித்துள்ளார். இதுகுறித்து அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமின்றி பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட தங்களது கருத்துகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.