நட்சத்திர வீரர்கள் நிறைந்த மும்பை ஹாட்ரிக் தோல்வி ஏன்?கேப்டன்சி பற்றி எழும் கேள்விகள்

Wait 5 sec.

வீரர்களின் திறமை மற்றும் அனுபவம் வைத்துப் பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் தான் சிறந்த பவர்பிளே பௌலர்களைக் கொண்ட அணி. தீபக் சஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா என பவர்பிளேவில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய பௌலர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள். இத்தனை உலகத்தர பௌலர்கள் இருந்தும் இந்த சீசன் மும்பை இந்தியன்ஸால் பவர்பிளேவில் சோபிக்க முடியவில்லை.