இந்தப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு எதிராக 128.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிய சாம்சன், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 207.5 என்ற ஸ்டிரைக் ரேட்டில் (40 பந்துகளில் 83 ரன்கள்) அதிரடி காட்டினார். பும்ராவுக்கு எதிராகவும் கூட 153.8 என்ற ஸ்டிரைக் ரேட்டில் (13 பந்துகளில் 20 ரன்கள்) விளையாடினார் சாம்சன்.