திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவ பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், துணைவேந்தர் "மாணவிகள் 'ஷார்ட்ஸ்' அணிவது மற்றவர்கலுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கான 'அழைப்பாக இருக்கும்' என கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் பெருமளவில் போராட்டம் நடத்தினர்.