இந்த சீசன் தொடங்கும்போது பேட்டிங் அட்டகாசம், பௌலிங் தான் பிரச்னை என்று பேசிக்கொண்டிருந்த நிலையில், தற்போது எல்லாம் தலைகீழாக மாறிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. சிஎஸ்கே பௌலர்கள் மெல்ல முன்னேற்றம் கண்டுகொண்டிருக்க, அவர்களின் பேட்டர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள்.