மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா, அவரது கணவர் அதிபராக இருந்த காலத்தில் ஒரு "கூச்ச சுபாவமுள்ள இல்லத்தரசி" என்று அறியப்பட்டார். ஆனால், பின்னாளில் ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்று, வங்கதேசத்தின் இரு பெரும் பெண் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.