சௌதி அரேபியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரிப்பது ஏன்?

Wait 5 sec.

வளைகுடா பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே இம்மாதம் தொடங்கியதிலிருந்தே பதற்றம் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட ஓர் அறிவிப்பு, பதற்றங்கள் தணியக்கூடும் என்ற ஊகங்களை ஏற்படுத்தியது. இருப்பினும், இரு நாடுகளின் முரண்பட்ட புவிசார் அரசியல் லட்சியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.